பொன். சிவகுமாரனின் 46 ஆவது நினைவேந்தல் அனுஷ்டிப்பு

06 Jun, 2020 | 08:29 PM
image

விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து தியாகி பொன் சிவகுமாரனின் 46 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் உரும்பிராயில் உள்ள திருவுருவச்சிலை வளாகத்தில் இடம்பெற்றது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வு அகவணக்கத்துடன் ஆரம்பமானது. 

தவிசாளரின் அஞ்சலிக்குறிப்பினைத் தொடர்ந்து தியாகி பொன் சிவகுமாரனின் சகோதரி சிவகுமாரி ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் மலர்மாலைகளை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 

தொடர்ந்து  வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், சுன்னாகம் பிரதேச சபை தவிசாளர் தர்ஷன், யாழ். பிரதி முதல்வர் து.ஈசன்,   முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான பாலசுப்பிரமணியம் கஜதீபன், விந்தன் கனகரத்தினம், நல்லூர் உப தவிசாளர் ஜெயகரன், வலிகாமம்; கிழக்கு பிரதேச மன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், பிரமுகர்கள், சனசமூக நிலையங்களின் தலைவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

சுகாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு உரைகள் இடம்பெறாது தவிர்க்கப்பட்டு சமூக இடைவெளி பேணப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் மட்டுப்படுத்தப்பட்டன.

 

அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னிருந்து புலனாய்வாளர்களால் கடுமையாக குறித்த பிரதேசம் கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருந்தமையும் பின்னர் சம்பவ இடத்தில் விசேட அதிரடிப்படையினர் பீல்பைக்களில்  வருகை தந்ததுடன் பிரதேசத்தில் தரித்து நின்ற தவிசாளரின் வாகனத்தினை சுற்றி பர்த்து யார் பயன்படுத்தும் வாகனம் என விசாரித்துச் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு வஜிரா பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை...

2025-03-22 15:30:24
news-image

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்...

2025-03-22 13:03:04
news-image

IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் இப்தார்...

2025-03-22 11:22:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31
news-image

அவிசாவளை சீரடி சாயி பாபா ஆலய...

2025-03-20 17:21:15
news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32
news-image

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற...

2025-03-19 11:13:40
news-image

யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும்...

2025-03-18 12:55:59
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர்...

2025-03-18 10:49:19
news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52