(இரா.செல்வராஜா)

தென்மேல் பருவபெயர்ச்சி ஆரம்பித்துள்ளதால் மழையுடனான காலநிலை இன்னும் ஒரு சில தினங்களுக்கு நீடிக்குமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய மேல் வடமேல், சப்பிரகமுவ, ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யுமெனவும் சப்ரகமுவ மேல் வடமேல் மாகாணங்களில் 50 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை அவதான நிலைய அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.கொழும்பு, புத்தளம், மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலான கடற் பிராந்தியங்களிலும் மாத்தறை அம்பாந்தோட்டை பொத்துவில் ஊடாக மட்டகளப்பு வரையிலான கடற் பிரந்தியங்களில்  மணிக்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும்  தெரிவித்தார்.

காற்று வீசும் வேளையில் கடல் கொந்தளிப்பாக காணப்படும். எனவே மீனவர்களும் கடற்சார் தொழிலாளர்களும் கவனத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.