அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டன்  இலவச வை பை வசதியை வழங்குவதாக வாக்குறுதியை அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஹிலரி கிளிண்டன் அவரின் உத்தியோகபூா்வ டுவிட்டர் பக்கத்தில், இரண்டு வார்த்தைகள் - இலவச வை பை. புகையிரத நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பிற பொது இடங்களில் என்று பதிவேற்றியுள்ளார்.

ஏற்கனவே அமெரிக்காவில் 2020க்குள் அனைத்து வீடுகளுக்கும் பிரோட்பேண்ட் வசதி செய்து தரப்படும் என்று ஹிலரி வாக்குறுதி அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.