ஜோர்ஜியாவின் கிராமப்புறத்தில் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் இன்டியானாவில் மரணச் சடங்கிற்குச் சென்ற புளோரிடாவைச் சேர்ந்த ஐவரே  உயிரிழந்துள்ளனர்.

ஜோர்ஜியாவில் அட்லாண்டா நகரின் தென்கிழக்குப் பகுதியில், சுமார் 100 மைல் (161 கிலோமீற்றர்) தொலைவில் ஏற்பட்ட விபத்தில் எவரும் உயிர் தப்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளோரிடாவின் மோரிஸ்டனைச் சேர்ந்த 67 வயதுடைய  லாரி ரே ப்ரூட், புளோரிடாவின் கெய்னெஸ்வில்லியைச் சேர்ந்த 41 வயதுடைய ஷான் சார்லஸ் லாமண்ட், 43 வயதுடைய அவரது மனைவி ஜோடி ரே லாமண்ட் மற்றும் அவர்களுடடைய மகளான 6 வயதுடைய ஜெய்ஸ்,4 வயதுடைய ஆலிஸ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.  

குறித்த பைபர் பிஏ 31-டி  என்ற விமானம் புளோரிடாவில் வில்லிஸ்டனிலிவிருந்து இன்டியானாலுள்ள நியூகேஸிலுக்கு பயணித்துள்ளது.

விமான விபத்தை நேரில் கண்ட மில்டெஜ்வில்வில் வசிக்கும் ட்ரேசி கார்ட்டர் தெரிவிக்கையில்,

விமானம்  குறித்த பகுதியில் தீப்பிடித்தவாறு வானத்தில் சுற்றியுள்ளது. தீப்பிடித்த விமானத்தின் பகுதிகள் பறந்து அருகிலுள்ள வயலில் விழுந்ததோடு பாரிய சத்தம் கேட்டதாக  கூறினார்.

குறித்த விமான விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து நிர்வாகம் (FAA) மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.