(செ.தேன்மொழி)

கொழும்பில் பல பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலத்தில் முன்னெடுக்கப்பட்டு சுற்றிவளைப்பின்போது ஹெரோயின், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களுடன் 437 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேல்மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழிகாட்டடிலின் கீழ் இடம்பெற்றுள்ள இந்த சோதனை நடவடிக்கைகளின் போது 408 இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது ஹெரோயினுடன் 140 பேரும், கஞ்சாவுடன் 63 பேரும், 15பேர் ஐஸ் போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பான  சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.