கணினி மயமாக்கப்பட்ட ஸ்கேனிங் கதிர்வீச்சு பிரிவுக்கான புதிய கட்டிடம் அங்கொடையில்

Published By: J.G.Stephan

06 Jun, 2020 | 05:36 PM
image

அங்கொடை தேசிய தொற்றுநோய்கள் நிறுவனத்தில் கணினிமயமாக்கப்பட்ட ஸ்கேனிங் கதிர்வீச்சு பிரிவுக்காக (CT Scanner Unit) கடற்படையின் பங்களிப்புடன் கட்டபட்ட இரண்டு மாடி கட்டிடம் 2020 ஜூன் 04 அன்று அதிகாரப்பூர்வமாக குறித்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ்  நாடு முழுவதும் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மேலும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஒரு பாராட்டத்தக்க வேலையைச் செய்து வரும் சுகாதாரப் பணியாளர்களின் வசதிகளை மேம்படுத்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் நேரடி மேற்பார்வையின் கீழ் பல திட்டங்கள் கடற்படை மேற்கொண்டு வருகிறது.



கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முதன்மை கவனிப்பை வழங்குவதில் பெரும் பங்கு வகிக்கும் அங்கொடை தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்திற்கு நீண்டகால தேவையாக இருந்த கணினி மயமாக்கப்பட்ட ஸ்கேனிங் கதிர்வீச்சு இயந்திரம் (CT Scanner) சுகாதார அமைச்சகம் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்ட பின்னர் 2020 ஏப்ரல் 10 ஆம் திகதி கடற்படை கணினிமயமாக்கப்பட்ட ஸ்கேனிங் கதிர்வீச்சு பிரிவுக்கான கட்டடத்தின் கட்டுமானத்தை ஆரம்பித்ததுடன் 50 நாட்களுக்குள் கட்டுமானத்தை முடித்து, மருத்துவ உபகரணங்களை நிறுவுவதற்காக 2020 மே 29 அன்று வைத்தியசாலை ஊழியர்களிடம் ஒப்படைத்துள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட கட்டிடத்தில் கணினிமயமாக்கப்பட்ட ஸ்கேனிங் கதிர்வீச்சு இயந்திரம் நிறுவப்பட்ட பின்னர், கணினிமயமாக்கப்பட்ட ஸ்கேனிங் கதிர்வீச்சு பிரிவு 2020 ஜூன் 4 ஆம் திகதி அதிகாரபூர்வமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவம் அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் கடற்படைத் தலைமை பணியாளர் ஆகியோர் முன்னிலையில் வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டன. இந்நிகழ்வுக்காக அங்கொடை தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தின் அதிகாரிகள், மருத்துவ பணியாளர்கள் மற்றும், கடற்படையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய சுகாதார அமைச்சர், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு முப்படையினர் வழங்கிய பங்களிப்புக்கு தனது நன்றியைத் தெரிவித்ததோடு, இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் கடற்படை வழங்கிய சுகாதார சேவைகளைப் பாராட்டினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காதலனின் வீட்டின் மதில் இடிந்து விழுந்ததில்...

2025-03-24 17:50:42
news-image

யாழில் மின்கலங்களை திருடிய குற்றத்தில் கைதான...

2025-03-24 17:59:04
news-image

வெளிநாட்டு சிகரட்டுகள், மதுபான போத்தல்களுடன் இந்திய...

2025-03-24 16:58:37
news-image

பிரதமர், சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களின்...

2025-03-24 18:18:59
news-image

யாழில் வீடொன்றில் திருடி மதுபானம் வாங்கிய...

2025-03-24 16:42:32
news-image

இந்திய இராணுவத்தால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட...

2025-03-24 16:34:24
news-image

யாழ். சுழிபுரத்தில் கசிப்பு விற்றவர் கைது

2025-03-24 16:39:03
news-image

சிறுவர் பராமரிப்பு மத்திய நிலையத்திலிருந்து இரு...

2025-03-24 16:33:15
news-image

மட்டக்களப்பு - கொழும்புக்கு இடையிலான ரயில்...

2025-03-24 16:24:17
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் ;...

2025-03-24 16:18:26
news-image

தையிட்டியில் சட்டவிரோத கட்டடத்தை திறந்துவைத்த வட...

2025-03-24 16:06:47
news-image

இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” இணைய...

2025-03-24 15:44:19