பதுளை- பசறை பகுதியில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று பசறை, மடுல்சீமை, கரந்தியெல்ல பகுதியில் நீர்நிரம்பிய குழியொன்றில் நீராடிக் கொண்டிருந்த 38 வயதுடைய தந்தையும் அவரது 12 வயதுடைய மகளும் மற்றும் 13 வயதுடைய உறவு முறையான சிறுமி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மடுல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.