பிக்பொஸ் பிரபலமும், எம்மண்ணை சார்ந்தவருமான நடிகை லொஸ்லியா தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

சின்டோ ஸ்டுடியோஸ் மற்றும் சினிமாஸ் ஸ்டுடியோஸ் ஆகிய இரண்டு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜேப்பியார் மற்றும் ஸ்டாலின் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பிரண்ட்ஷிப்’. இந்தப் படத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், பிக் பொஸ் மூலம் புகழ்பெற்ற எம்மண்ணின் பெருமைமிகு மங்கை லொஸ்லியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு திரைக்கதை அமைத்து ஜோன் பால்ராஜ் மற்றும் சாம் சூர்யா என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்குகிறார்கள். இவர்கள் ஏற்கனவே ‘சென்னையில் ஒரு நாள்=2’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்கள். 

இந்த படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் பிக் பொஸ் பிரபலம் லெஸ்லியாவும், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் நடிகை நடிகர்களாக அறிமுகமாகிறார்கள். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. இதற்கு இணையத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.