(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை மாலை 10 மணி வரை 1801 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் புதிதாக வைரஸ் தொற்றுக்குள்ளான 4 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இது வரையில் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1801 ஆக அதிகரித்துள்ளதோடு, இன்றைய தினம் குணமடைந்த 19 பேருடன் சேர்த்து குணமடைந்தோர் எண்ணிக்கை 858 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு தற்போது 931 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, 66 பேர் வைத்தியகண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.