மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓல்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இன்று குளவி கொட்டுக்கு இலக்காகி 11 தோட்ட தொழிலாளர்களும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்கள்.

குளவி கொட்டுக்கு இலக்கானவர்களில் 8 பெண் தொழிலாளர்களும் 3 ஆண் தொழிலாளர்களும்  அடங்வர்.

இவர்களின் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளதுடன், அவ்வாறு கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பியவர்களில் கர்பணிதாய் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், லக்கம் சீர்பாத பகுதியில் 29 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவரும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இவர் விறகு வெட்ட சென்ற வேளையில் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதுடன், சிகிச்சைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்தியாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவறுதாக மாவட்ட வைத்திய அதிகாரி லியத்த பிட்டிய தெரிவித்தார்.