முழு உலகையே ஸ்தம்பிதமடைய செய்த கொரொனா வைரஸிலிருந்து உலகை மீட்டெடுப்பதற்கான, சர்வதேச தடுப்பூசி கூட்டணி அமைப்பான, 'காவி'க்கு, 12 கோடி ரூபாய் வழங்குவதாக,இந்தியப் பிரதமர், மோடி தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான  பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில், சர்வதேச தடுப்பூசி கூட்டணி அமைப்பான காவியின் மாநாடு, நேற்று ஆரம்பித்தது, மாநாட்டை பிரித்தானிய பிரதமர், பொரிஸ் ஜொன்சன் ஆரம்பித்து வைத்தார்.இந்நிலையில், “காணொளி அழைப்பில் (வீடியோ கான்பரன்சிங்)' வழியாக நடந்த இந்த மாநாட்டில் பிரதமர், மோடி, உரையாற்றினார்.

சர்வதேச தடுப்பூசி கூட்டணி அமைப்பான காவிக்கு, இந்தியா சார்பில், 12 கோடி ரூபா வழங்கப்படும். இந்தியாவின் தேவையால், தடுப்பூசி விலை, சர்வதேச அளவில் குறையும்.

உலக தரம் வாய்ந்த மருந்துகள், தடுப்பூசிகள் இந்தியாவில் குறைந்த விலையில் தயாரிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தையும், இந்தியாவால் தயாரிக்க முடியும். இவ்வாறு மோடி பேசினார். மாநாட்டில், 33 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றியிருந்தமை குறிப்பிடதக்கது.