மொனராகலை-இத்தேகட்டுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த சந்தேக நபரொருவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இன்றைய தினம் மொனராகலை-இத்தேகட்டுவ பகுதியில் பொலிஸாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதில் சந்தேக நபர் பலத்த காயங்களுக்குள்ளானார்.

இதையடுத்து குறித்த சந்தேகநபர் பலத்த காயங்களுடன் மொனராகலை வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் சிகிச்சை பலனின்றி சந்தேகநபர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும், பதிலுக்கு பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் குறித்த சந்தேக நபர் காயமடைந்ததாகவும் பொலிஸ் ஊடக  பேச்சாளர் எஸ்.பி. ஜாலிய சேனரத்ன தெரிவித்தார்.

சந்தேக நபரின் வசமிருந்து கத்தியொன்றும் கையெறி குண்டும் மற்றும் துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளன.