முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலிநகர், வவுனிக்குளத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரைக் காணவில்லை என்று அவருடைய மனைவியால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.பாலிநகர் தனம் ஸ்டோர்ஸ் உரிமையாளரான பாலசுந்தரராஜா பிரபாகரன் (பிரபா) என்ற வர்த்தகரே காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

கடந்த 03ஆம் திகதி முதல் அவர் காணாமல் போயுள்ளதாகவும் அவரைக் கண்டால் பாலிநகர், வவுனிக்குளம் என்ற முகவரிக்கோ அல்லது 0766602122, 0778027498, 0778860893 என்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறும் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.