த பினான்ஸ் நிறுவனத்தின் வைப்பாளர்களுக்கு பணத்தை செலுத்தும் நடவடிக்கையை எதிர்வரும் 7 ஆம்  திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நாடு முழுவதிலுமுள்ள 60 மக்கள் வங்கி கிளைகள் மூலம் மேற்கொள்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

த பினான்ஸ் கிளை அமைந்துள்ள நகரத்திற்கு அருகாமையில் இருக்கும் மக்கள் வங்கி கிளைகள் மூலம் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.