‘ஆதித்யவர்மா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் துருவ் விக்ரம் முதன்முறையாக தன்னுடைய தந்தையும் நடிகருமான சீயான் விக்ரமுடன் இணைகிறார்.

பீட்ஸா, ஜிகிர்தண்டா, இறைவி, மெர்க்குரி, பேட்ட, ஜகமே தந்திரம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் , சீயான்விக்ரம் நடிக்கும் ‘விக்ரம் 60’ என்ற படத்தை இயக்குகிறார். 

முன்னணி தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான லலித்குமார் தயாரிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். சீயான் விக்ரமுடன், அவருடைய மகனும், ‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நடிகராகவும் அறிமுகமான துருவ் விக்ரமும் நடிக்கிறார். 

இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படபிடிப்பு நடைபெறுவதற்கு ஆறு மாதம் முதல்ஓராண்டு வரை ஆகும் என்பதால்,அதில் கிடைத்த ஒய்வு நேரத்தில் நடிகர் சீயான் விக்ரமும், துருவ் விக்ரமும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்கள். 

இந்த படத்தின் கதை கேங்ஸ்டர் கதையென்றும், இதில் தந்தைக்கும், மகனுக்குமிடையேயான உணர்ச்சிமிகு போராட்டத்தை மையப்படுத்திய கதை என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். 

முதன்முதலாக தந்தையும், மகனும் இணைவதால் இப்படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.