சிங்கள மக்களின் உதவியை நாடும் இலங்கைத் தமிழ் தாய்மார்கள்... எதாற்காக ?

05 Jun, 2020 | 09:45 AM
image

- சிவா பரமேஸ்வரன் (முன்னாள் மூத்த செய்தியாளர் பி.பி.சி. )

இலங்கையில் பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் கொடூரமாக முடிவடைந்த யுத்தத்தின் கடைசி நாட்களில் காணாமல்போன மற்றும் கையளிக்கப்பட்ட உறவுகளைக் கண்டுபிடிக்க சிங்கள மக்களின் உதவியை இப்போது தமிழ்த் தாய்மார்கள் கோரியுள்ளனர்.

தமது உறவுகளை கண்டுபிடித்துக்கொடுக்குமாறு கோரி கடந்த 1200 நாட்களாக அவர்கள் சுழற்சி முறையின் உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடி வருகின்றனர்.

எண்ணற்றவர்களை உயிர்ப்பலி கொண்ட கொடூரமான அந்த யுத்தம்  18 மே 2009  அன்று முடிவடைந்துவிட்டதாக அரசு அறிவித்த நிலையில், ஏராளமானவர்கள் அதற்கு முன்னரும் பின்னரும் அரச படைகளிடம் `சரணடைந்தனர்` அல்லது `கையளிக்கப்பட்டனர்.

உறவினர்களும் தெரிந்தவர்களும் அவர்களைக் கடைசியாகப் பார்த்த தருணம் அதுவே. அதன் பிறகு அவர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

இறுதிப் போர் முடிவடைவதற்கு ஒரு வாரம் முன்னர் இலங்கை இராணுவம், கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் போர் வலையத்தில் சிக்கியுள்ள மக்கள் அரசு முன்னெடுக்கும் `மனிதாபிமான நடவடிக்கையின்` மூலம் தமது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள `பாதுகாப்பான பகுதிக்கு` வந்துவிடுமாறு தொடர்ந்து அறிவித்தல் விடுத்தனர்.

சாட்சியங்கள் இன்றி நடைபெற்ற அந்தக் `கையளிப்பு` நிகழ்வின் போது, கையளித்தவர்களும் அவர்களைப் பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் வட்டுவாகல் பாலம் போன்ற இடங்கள் உறவுகள் ஒருவரையொருவர் பார்த்த கடைசித் தருணத்துக்கு மௌனமான சாட்சியாக உள்ளது.

தமது உறவுகள் காணாமல் போய், அவர்களைத் தேடும் முயற்சிகளை இன்னும் கைவிட தாய் ஒருவர், மிதவாத சிங்கள மக்கள், முற்போக்குவாதிகள், சிங்கள ஊடகங்கள் ஆகியோரிடம்- தமது முயற்சிகளுக்கு உதவி உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்ட- உதவுமாறு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

பாதுகப்புக் காரணங்களுக்காக அவரது பெயரை வெளியிடவில்லை.

வெறுப்புணர்வுக் கொள்கை

காணாமல் போனவர்களை கண்டறிய தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறும் நிலையில், கடிதத்தை எழுதிய அந்தத் தாய் ஆயிரம் நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற வீதிப் போராட்டங்களின் முன்னணியில் இருந்தவர். இப்போதும் அதிலிருந்து அவர் பின்வாங்கவில்லை.

அவர் விடுத்துள்ள வேண்டுகோளில் முன்னரும் இப்போதும் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் சிங்கள ஊடகங்கள் மூலமாக சிங்கள மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களின் மனசாட்சிகள் தட்டியெழுப்பப்பட வேண்டும். அதன் மூலம் அவர்கள் உண்மையை உணர்ந்து தொடர்ச்சியாக வந்த ஆட்சிகள் முன்னெடுத்த `வெறுப்புணர்வுக் கொள்கைக்கு` எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று வேண்டியுள்ளார்.

``அப்படியான மனமாற்றத்தின் மூலம் அவர்கள் எம்மை உடன்பிறந்தோராகப் பாவித்து, எமக்காகப் போராட முன்வரும் சூழலொன்று ஏற்பட வேண்டும் என்று`` சிங்கள மக்களுக்கு விடுத்துள்ள உருக்கமான அந்த வேண்டுகோளில் கோரியுள்ளார்.

இலங்கை அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தில் இணைந்து முன்மொழிந்த தீர்மானத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்து சில மாதங்கள் ஆகியுள்ள நிலையிலும், போர் முடிந்து அரச படைகளிடம் தமது உறவுகளை கையளித்து பதினோரு ஆண்டுகளாகும் ஆகும் நிலையிலும் அவரது உருக்கமான அந்த வேண்டுகோள் வந்துள்ளது.

``தேசிய நல்லாட்சி அரசாங்கம்`` தம்மைக் கூறிக்கொண்ட முந்தைய அரசு நம்பகத்தன்மை வாய்ந்ததொரு விசாரணையை சர்வதேச பங்களிப்புடன் முன்னெடுத்து, அதன் மூலம் இறுதிகட்டப் போரில் இடம்பெற்றவகைகளுக்கு பொறுப்புக்கூற வழிசெய்யும் தீர்மானமொன்றை ஐ நாவின் இணைந்து முன்மொழிந்தது.

தற்போது வெளிநாட்டு உறவுகள் அமைச்சராக இருக்கும் தினேஷ் குணவர்தன முந்தைய அரசாங்கம், ``அப்போது உள்நாட்டில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த இணக்கப்பாட்டு வழிமுறைகளைப் புறந்தள்ளி, அதுவரை இல்லாத வகையில், நாடுகளுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் இலங்கையின் வெளியுறவுக் கொள்கைக்கு முரணாக, நாட்டில் நிலவும் சூழல் தொடர்பில், ஐ நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் 30/1 ஐ இணைந்து முன்மொழிந்தது`` என்று விமர்சித்துள்ளார்.

எனினும் கடந்த ஒரு தசாப்தமாக, எந்த அரசும், `சரணடைந்த, காணாமல் போன அல்லது கையளிக்கப்பட்ட நபர்கள்` அல்லது வேறு எந்தப் பெயரில் அதை அழைத்தாலும், பாதிக்கப்பட்டோர்களுக்கு அவர்கள் குறித்து எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

 

போராட்டங்களில் உயிரிழந்த எழுபது பேர்

இலங்கை படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவுகளை, கடந்த பத்தாண்டுகளாக உறவுகளைத் தேடும் போராட்டங்களில் குறைந்தது 70 பெற்றோர் உயிரிழந்துள்ளனர்.

அந்தத் தாயின் வேண்டுகோள் கடிதத்தின், நகலை நாம் கண்டோம். அதில் தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசுகள் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான அலுவலகம்-ஓ எம் பி- எனும் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் உள்ளூர் விசாரணைகளை முன்னெடுப்பதாக ``சர்வதே சமூகத்தை ஏமாற்றியுள்ளன`` என்று சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமொன்றின் மூலம் உருவாக்கப்பட்ட அந்த ஓ எம் பி அமைப்பு, காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி, அவர்களைக் கண்டுபிடித்து, குடும்பத்தாருக்குத் தகவல்களை தெரிவித்து, இழப்பீடுகளை வழங்குவதற்கான ஆணையைக் கொண்டிருந்தது. எனினும் இதுவரை அந்த அலுவலகத்தின் மூலம் காத்திரமான முடிவுகள் ஏதும் ஏற்படவில்லை.

கடந்த பத்தாண்டுகளாக, இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று காணாமல் போனவர்களில் ஐந்து பேரைக் கூட இதுவரை கண்டுபிடிக்காத ஓ எம் பி அமைப்பின் மீது நம்பிக்கையிழந்து விட்டதாகக் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

``தற்போது ஆட்சியில் உள்ளவர்களுக்கு எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியும். அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை சர்வதேசச் சமூகம் கூற வைக்க வேண்டும் அல்லது அவர்களே தாமாக வந்து உண்மையை வெளியிட வேண்டும்``

ஆனால் இலங்கை அரசோ, ஐ நா தீர்மானம் 30/1 `தேசிய நலனை குறைத்து மதிப்பிட்டு, தேசியப் பாதுகாப்பை விட்டுக் கொடுத்து, தேசியப் புலனாய்வு நடவடிக்கைகளைப் பலவீனப்படுத்தி, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை உதாசீனப்படுத்தியது`` என்று கூறுகிறது.

``நாட்டில் 30 ஆண்டுகள் நடைபெற்ற யுத்தம் மற்றும் உயிரிழப்புகள் ஆகிய இரண்டு குறித்தும் தவறான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன``

காணாமல் போன தமது உறவுகள் குறித்து அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை மட்டுமே அளித்தன, காணாமல் போன தமது உறவுகளை கண்டுபிடித்து மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்தத் தாயின் உருக்கமான கடிதம் கூறுகிறது. போரினால் பாதிக்கப்பட்ட சிறுபான்மைத் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் அரசியல் கட்சிகள், காணாமல் போன உறவுகளை மீட்கவோ அவர்கள் குறித்த தகவல்களைப் பெற்றுத்தரவோ போதிய அளவுக்குச் செய்யவில்லை என்றும் அந்தக் கடிதம் கூறுகிறது.

ஐ நா மற்றும் இதர அமைப்புகளுடன் தாங்கள் தொடர்ந்து செயல்பட விரும்புவதாக இலங்கை அரசு ஐ நா மனித உரிமைகள் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது. இதில் மனித உரிமைகள் கடப்பாடுகளும் அடங்கும்.

எனினும் கடந்தகால அனுபவங்களை வைத்துப் பார்க்கும் போது, காணாமல் போனவர்கள் குறித்த உண்மைகளைத் தெரிவிப்பதற்கு இலங்கை அரசுக்கு அரசியல் உறுதிப்பாடோ அல்லது முன்னுரிமையோ இருப்பதாகத் தெரியவில்லை.

கடந்த 2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி வலிந்து காணாமல் ஆக்கப்படுவது குற்றமாக்கப்பட்டுள்ளது.

ஊடகச் சுதந்திர அட்டவணையில் இலங்கை மிகவும் கீழேயுள்ள நிலையில், சிங்கள ஊடகங்கள் போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் வேதனை மற்றும் நிலையைச் தென்னிலங்கை மக்களுக்கு காழ்ப்புணர்ச்சியின்றி எடுத்துக் கூற சிங்கள ஊடகங்கள் முன்வருமா?

அதன் மூலம் சிங்கள மக்களின் மனசாட்சியை தட்டியெழுப்பி, தங்கள் வாக்குகள் மூலம் வெற்றி பெற்று இன்று நாட்டையும் அரசையும் ஆளும் ஆட்சியாளர்களிடமிருந்து- போரினால் பாதிக்கப்பட்டு தமது உறவுகளை தேடி அலைந்து-சொல்லொனாத் துன்பங்களையும் துயரங்களையும் எதிர்கொண்டு-தமது உறவுகள் குறித்து எந்தவொரு தகவலும் தெரியாமல் தவிக்கும் மக்களுக்கு நீதி கிடைக்க உதவுவதற்கு அவர்கள் முன்வருவார்களா?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22