காணாமல் போனோரைக் கண்டுபிடிக்க சிங்கள மக்களின் உதவியை நாடும் இலங்கைத் தமிழ் தாய்மார்கள்

05 Jun, 2020 | 09:48 AM
image

( சிவா பரமேஸ்வரன் )

பிரத்தியே கட்டுரைக்கு -  https://www.virakesari.lk/article/83415

இலங்கையில் பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் கொடூரமாக முடிவடைந்த யுத்தத்தின் கடைசி நாட்களில் காணாமல்போன மற்றும் கையளிக்கப்பட்ட உறவுகளைக் கண்டுபிடிக்க சிங்கள மக்களின் உதவியை இப்போது தமிழ்த் தாய்மார்கள் கோரியுள்ளனர்.

தமது உறவுகளை கண்டுபிடித்துக்கொடுக்குமாறு கோரி கடந்த 1200 நாட்களாக அவர்கள் சுழற்சி முறையின் உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடி வருகின்றனர்.

எண்ணற்றவர்களை உயிர்ப்பலி கொண்ட கொடூரமான அந்த யுத்தம்  18 மே 2009  அன்று முடிவடைந்துவிட்டதாக அரசு அறிவித்த நிலையில், ஏராளமானவர்கள் அதற்கு முன்னரும் பின்னரும் அரச படைகளிடம் `சரணடைந்தனர்` அல்லது `கையளிக்கப்பட்டனர்.

உறவினர்களும் தெரிந்தவர்களும் அவர்களைக் கடைசியாகப் பார்த்த தருணம் அதுவே. அதன் பிறகு அவர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

இறுதிப் போர் முடிவடைவதற்கு ஒரு வாரம் முன்னர் இலங்கை இராணுவம், கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் போர் வலையத்தில் சிக்கியுள்ள மக்கள் அரசு முன்னெடுக்கும் `மனிதாபிமான நடவடிக்கையின்` மூலம் தமது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள `பாதுகாப்பான பகுதிக்கு` வந்துவிடுமாறு தொடர்ந்து அறிவித்தல் விடுத்தனர்.

சாட்சியங்கள் இன்றி நடைபெற்ற அந்தக் `கையளிப்பு` நிகழ்வின் போது, கையளித்தவர்களும் அவர்களைப் பெற்றுக்கொண்டவர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் வட்டுவாகல் பாலம் போன்ற இடங்கள் உறவுகள் ஒருவரையொருவர் பார்த்த கடைசித் தருணத்துக்கு மௌனமான சாட்சியாக உள்ளது.

இந்நிலையில், தமது உறவுகள் காணாமல் போய், அவர்களைத் தேடும் முயற்சிகளை இன்னும் கைவிட தாய் ஒருவர், மிதவாத சிங்கள மக்கள், முற்போக்குவாதிகள், சிங்கள ஊடகங்கள் ஆகியோரிடம்- தமது முயற்சிகளுக்கு உதவி உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்ட- உதவுமாறு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்கலைக்கழக மாணவர்கள் பலவந்தமாக போராட்டங்களுக்கு அழைத்துச்...

2022-10-05 16:29:29
news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர்களுக்கு தேவையானவற்றை...

2022-10-05 15:54:54