கொரோனாவால் பாதிக்கப்பட்ட  சீன வைத்தியர் ஒருவருக்கு  உடல் முழுவதும் நிறம் மாறிக் கொண்டே வந்தது. கறுப்பு நிறமாக மாறிய நிலையில், சிகிச்சை பலனின்றி வைத்தியர் இறந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சீனாவில் முன்னணி வைத்தியரான ஹூ வெய்பெங் ட்னி என்ற பெயருடைய வைத்தியர், சிறுநீரக வைத்திய நிபுணராவார். குறித்த பகுதியில் பிரபலமான வைத்தியர் இவர் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், இவருக்கு கடந்த ஜனவரி மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல, இவருடன் வேலை பார்த்த மற்றொரு வைத்தியரான யி-பன் என்பவருக்கும் தொற்று உறுதியானது. இருவருமே ஒரே வைத்தியசாலையில் பணிப்புரிந்துள்ளனர். 

ஒரே நேரத்தில் வைரஸ் தொற்று உறுதியாகவும், இருவருமே சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களுக்கு தீவிரமான சிகிச்சை ஜனவரி மாதமே தரப்பட்டு வந்தது.

ஆனால் இவர்களது உடலின் நிறம் கறுப்பானது.இந்நிலையில், நிறம் மாறியதை கண்டு அங்கிருந்த வைத்தியர்களே அதிர்ச்சியாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாசக்கருவி (வென்டிலேட்டர்) பொருத்தப்பட்டும், அதற்கள் இவர்களது கறுத்த முகத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

ஒருகட்டத்தில் வைத்தியர் ஹூ வெய்பெங்-கின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னொரு  வைத்தியர் பன் உடல்நிலை தேறி மார்ச் மாதம் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

ஆனால் வைத்தியர்  ஹூ வெய்பெங்-கிற்கு ஏப்ரல் மாதம் நிலைமை மோசமாகிவிட்டது. அவரது மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டது. அவரை காப்பாற்ற வைத்தியர்கள் எவ்வளவோ முயன்றும், அது முடியாமல் போய்விட்டது. வைத்தியர்கள் ஹூ பரிதாபமாக உயிரிழந்தார். சக வைத்தியர்களுக்கு இது பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், வைத்தியர் ஹூ மரணமடைந்ததால், சீனாவுக்கு பின்னடைவாக இது பார்க்கப்படுகிறது. முதன்முதலில் தோன்றிய வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்த சீனாவால், ஒரு வைத்தியரை 4 மாதமாகியும் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என அந்நாட்டு மக்களும், ஊடகங்களும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.