முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிமட்டாவ பகுதியில் இன்று (04) அதிகாலை இரு குழுக்களுக்கிடையே மோதல் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற இந்த மோதலில் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மதுபோதையிலிருந்த ஒருவரே தனது தோட்டத்தில் பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் இவ்வாறு வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் முந்தல் பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த குழு மோதலில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகக் கூறப்படும் நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்ட பொலிஸார், இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அசித லக்ருவன் தலைமையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மேலும் குறிப்பிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM