ஒன்றை விட்டுக்கொடுத்தால் தான் இன்னுமொன்றை அடையலாம் என்பதற்கு ஏற்றால் போல் ஒரு நிகழ்வு டென்மார்க்கின்  ‘டெனிஷ் சுப்பர் லிகா’ கால்பந்தாட்டப்  போட்டியில் நிகழ்ந்துள்ளது. 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சில நாடுகளில் போட்டிகள் நடத்தப்படவில்லை. சில நாடுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்ற போதிலும் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அந்த வகையில் டென்மார்க்கில் நடைபெற்று வரும் ‘டெனிஷ் சுப்பர் லிகா’  கால்பந்தாட்டப் போட்டிகளை இணையத்தளம் வாயிலாக இப்போட்டிகளைக் காண பிரத்தியேகமான செயலி காணப்படுகிறது. இந்த செயலியின் மூலமாக போட்டியை இணையத்தளம் மூலமாக கண்டுகளிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி இப்போட்டித் தொடரில் ரேண்டர்ஸ் மற்றும் ஹோப்ரா அணிகள் அண்மையில் மோதியிருந்தன. இப்போட்டியை இணையத்தள செயலி மூலமாக கண்டுகளித்த ரசிர்களின் வீடியோக்கள் மைதான அரங்குகளில் வைக்கப்பட்டுள்ள இராட்சத திரைகளில் காண்பிக்கப்பட்டன. இதனால் ரசிகர்கள் மைதான அரங்குககளில் இருந்தபடியான ஓர் விம்பம் ஏற்படுத்தப்பட்டது.

இதனால், ரசிகர்களின் மகிழ்ச்சித் தருணங்கள், கரகோசம் எழுப்புதல் போன்றவற்றை காணும் கால்பந்தாட்ட வீரர்கள் உற்சாகத்தில் விளையாடியிருந்ததுடன், வீட்டிலிருந்து போட்டியை ரசித்த ரசிகர்களும் பரவசம் அடைந்தனர்.

இவ்வாறதொரு புதுப்படைப்பை ஏற்படுத்தியமை கால்பந்தாட்ட அரங்கில் ‘வேற லெவல்’ என கால்பந்தாட்ட வீரர்கள், ரசிகர்கள் என பலரும் புகழ்ந்து வருகின்றனர்.