அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததுடன் பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்தமை ஆகிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் அண்மைக்காலமாக இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிள் ஒன்றில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இத்தகவலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிநடத்தலுக்கமைய பொலிஸார் மாறுவேடம் அணிந்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.
இதன் போது மாறுவேடத்தில் சென்ற பொலிஸ்ர் கைத்தொலைபேசி ஊடாக சந்தேக நபரை தொடர்பு கொண்டு கஞ்சாவினை வாங்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
இவ் தொலைபேசி உறையாடலின் பின் சந்தேக நபர் கஞ்சா மற்றும் வாள் என்பவற்றை தம்முடன் எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வருகை தந்துள்ளார்.
உடனடியாக செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபரை மடக்கி பிடித்ததுடன் பாடசாலை புத்தகத்தில் சுற்றிய நிலையில் 75 கஞ்சா பொதிகளையும் குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 2 அடி நீள வாள், கைத்தொலைபேசி மற்றும் வாகன இலக்கத்தகடு அற்ற பதிவு செய்யப்படாத டியோ ரக கறுப்பு நிற மோட்டார் சைக்கிள் என்பவற்றை மீட்டுள்ளனர். இவரிடம் மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 300 கிராம் நிறையுடையது என பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் இவ்வாறு கைதான சந்தேக நபர் மருதமுனை அல்மனார் வீதியை சேர்ந்த 27 வயதுடைய நபர் எனவும் வெள்ளிக்கிழமை(5) கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM