இந்தியாவின் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஒரு கர்ப்பிணி யானை சமீபத்தில் பட்டாசுகளால் நிரப்பப்பட்ட அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவை மாத்திரமல்லாது உலகத்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்து.
இந்நிலையில், குறித்த கர்ப்பிணி யானையை கொலை செய்தவர்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு இந்திய மதிப்பில் ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்படும் என்று 2 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கடவுளின் தேசம் என புகழப்படும் கேரளாவில் யானைகளும் தெய்வமாக வணங்கப்படுகிறது.
கேரளாவில் அனைத்து கோவில்களிலும் நடைபெறும் விழாக்களில் தெய்வங்களின் சிலைகளை ஏந்தி செல்லும் பொறுப்பு யானைகளுக்கே வழங்கப்படும்.
இதனால் கேரளாவில் எப்போதும் யானைகளுக்கு தனி மரியாதை உண்டு.
கேரளாவின் அரசு இலச்சினையிலும் 2 யானைகள் இடம் பெற்றிருக்கும்.
இவ்வாறு யானைகளுக்கு மரியாதை அளிக்கும் கேரளாவில் மனிதாபிமானம் அற்ற முறையில் ஒரு யானையை வெடி வைத்து கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.
"யானை அனைவரையும் நம்பியது. யானை சாப்பிட்ட அன்னாசிப்பழம் வெடித்தபோது, யானை தன்னைப் பற்றி யோசிக்காது அதன் வயிற்றில் உள்ள குட்டியை பற்றியே யோசித்து அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். என்று யானையின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபபட்ட குழுவில் அங்கம் வகித்த வன அதிகாரி மோகன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM