Tata Nano Challenge Mileage Rally 2016 வாகனப் பேரணி

Published By: Priyatharshan

30 Jun, 2016 | 02:14 PM
image

இலங்கையில் Tata வாகனங்களுக்கான அங்கீகாரம் பெற்ற ஒரேயொரு விநியோகத்தராகத் திகழ்ந்து வருகின்ற Diesel & Motor Engineering PLC (DIMO) நிறுவனம், அண்மையில் இடம்பெற்ற “Tata Nano Challenge Mileage Rally 2016” வாகன பேரணியின் மூலமாக மிகவும் எரிபொருள் வினைதிறன் கொண்ட Tata Nano காரை தெரிவு செய்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் வினைத்திறன் கொண்ட பயணிகளுக்கான போக்குவரத்து கார்களுள் ஒன்றாக Tata Nano திகழ்ந்து வருவதை வாடிக்கையாளர்கள் மத்தியில் விழிப்புணரச் செய்யும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட Tata Nano Challenge Mileage Rally 2016 வாகன பேரணி, கொழும்பிலே ஆரம்பித்தது. 

நாடெங்கிலுமிருந்து நூறு வரையான Tata Nano உரிமையாளர்கள் இப்பேரணியில் பங்குபற்றினர். DIMO நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலிருந்து ஆரம்பித்த இப்பேரணி, கிரிபத்கொடை, சியம்பலாபே, கம்பஹா, உடுகம்பொல மற்றும் திவுலப்பிட்டிய நகரங்களினூடாக 100 கிலோ மீpற்றர் வரையான தூரத்தைக் கடந்து, இறுதியில் நீர்கொழும்பில் பேரணி முடிவு எல்லையைச் சென்றடைந்தது. 

இப்பேரணி தொடர்பில் அறிவிக்கப்பட்ட போது பல நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் மத்தியில், முன்னரே தீர்மானிக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில், 100 வரையான Tata Nano கார்கள் மிகவும் கவனமான பரீசீலனையின் பின்னர் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவை பேரணிக்கு உகந்த நிலையில் இருப்பதை உறுதிசெய்வதற்காக இலவசமான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டன. 

இதில் பங்குபற்றிய அனைவருக்கும் பேரணியின் நேர அட்டவணை, மார்க்க வரை படம் மற்றும் வாகனத்தைச்செலுத்துவதற்கான உபயோகம் மிக்க தகவல்கள் வழங்கப்பட்டதுடன் இவற்றைப் பின்பற்றியே இறுதியாக சென்றடைய வேண்டிய இடத்திற்கு வாகனங்களைச் செலுத்திச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். 

ஒவ்வொரு வாகனத்திற்கும் அவை பயணத்தை ஆரம்பிக்க முன்னரும் பயணத்தை நிறைவு செய்த பின்னரும் எரிபொருள் தாங்கி முற்றாக நிரப்பப்பட்டு, எரிபொருள் வினைத்திறன் கணிப்பீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு வாகனமும் உள்ளெடுத்த எரிபொருளின் அளவு மற்றும் பயணத்தின் தூரம் ஆகியவற்றை துல்லியமாக அளவிடுவதை உறுதிசெய்வதற்கு மேற்குறிப்பிட்ட வழிமுறையே மிகச் சிறந்த வழிமுறையாகும்.

தனது Nano காரில் லீற்றர் ஒன்றுக்கு 36.88 கிலோமீற்றர் தூரம் என்ற மெச்சத்தகு பெறுபேற்றைப் பதிவு செய்த நுகேகொடையைச் சேர்ந்த ரணிகா சுலக்ஷனி பேரணியின் ஒட்டுமொத்த வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்டார். 

இந்தியாவிற்கான அனைத்துச் செலவுகளும் அடங்கிய சுற்றுலா ஒன்றை அவர் தனது பரிசாக வென்றதுடன் மிகச் சிறந்த முறையில் வாகனத்தைச் செலுத்தி அதன் எரிபொருள் வினைதிறனை நிரூபித்தமைக்காக இந்தியாவிலுள்ள Tata Motors உற்பத்தி நிலையத்திற்கு நேரடியாகச் செல்லும் வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு 12 இனைச் சேர்ந்த திரு. ஆர். ஏ. உபாலி கித்சிறி இரண்டாம் இடத்தைப் பெற்று, 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 2 இரவுகள் தங்குவதற்கான பரிசை வென்று கொண்டார். 

அங்கொடையைச் சேர்ந்த திரு. ரீ.பி.ஜீ. சொய்சா மூன்றாம் இடத்தைப் பெற்று 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 4 பேருக்கான இராப்போசனத்தை வென்று கொண்டார். 

“லீற்றர் ஒன்றுக்கு அதிகூடிய தூரம் பயணித்தமை” “மிகச் சிறந்த வகையில் உருமாற்றம் செய்யப்பட்ட துணைச் சாதனங்கள் பொருத்தப்பட்ட கார்” , “மிகச் சிறந்த முறையில் பேணப்பட்ட கார்” மற்றும் “DIMO நிறுவனத்தில் அதிக தடவைகள் பேணற் சேவைக்கு உட்படுத்தப்பட்ட கார்” ஆகியவற்றுக்கும் வேறாக பரிசுகள் வழங்கப்பட்டன. 

இதில் பங்குபற்றிய அனைத்து சாரதிகளுக்கும் ஆறுதல் பரிசுகளும் பங்குபற்றியமையை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. “தனித்துவமான இந்த மோட்டார் பேரணியில் பங்குபற்றி முதலாம் இடத்தை வென்றுள்ளமையையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்” என்று முதலாவது இடத்தை வென்றவர் குறிப்பிட்டார். 

“நான் எனது வாழ்நாளில் செலுத்திய கார்களில் மிகவும் எரிபொருள் வினைதிறன் கொண்ட காராக Tata Nano திகழ்வதுடன் எனது குடும்பத்தின் போக்குவரத்துச் செலவுகளை பெருமளவில் குறைப்பதற்கும் அது உதவியுள்ளது. மேலும் எனது குடுமபத்தினர் சௌகரியமாகவும் பாதுகாப்பாகவும் பயணிப்பதற்கு Tata Nano இடமளித்துள்ளது.”

ஜெட்விங் புளு ஹோட்டலில் இடம்பெற்ற வெற்றியாளர்களுக்கான பரிசுகளை கையளிக்கும் வைபவத்தில் DIMO மற்றும் Tata Motors நிறுவனங்களின் சார்பில் பல பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர். ரஞ்சித் பண்டிதகே (பணிப்பாளர் சபைத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர், DIMO), விஜித பண்டார (பணிப்பாளர், DIMO), மகேஷ் கருணாரட்ண (பொது முகாமையாளர் Tata வாகன பேணற் சேவைப் பிரிவு,DIMO), நவீன் செனவிரட்ண (பொது முகாமையாளர் - Tata வாகன உதிரிப்பாகங்கள் பிரிவு) மற்றும் அனுர விஜேசிங்க (பிரதிப் பொது முகாமையாளர், Tata பயணிகள் மோட்டார் கார்கள், DIMO) மற்றும் Tata Motors Limited நிறுவனத்தின் சார்பில் சுஜான் றோய் (பயணிகள் கார்களுக்கான சர்வதேச வியாபார சந்தைப்படுத்தல் சேவைகளின் தலைமை அதிகாரி மற்றும் பிராந்திய தலைமை அதிகாரி  (தெற்காசியா), ரந்தீர் சௌத்ரி (பயணிகள் வாகனங்களுக்கான (சர்வதேச வியாபாரம்) பிரதேச வாடிக்கையாளர் உதவி சேவை முகாமையாளர் மற்றும் பிரணாவ் குமார் (பயணிகள் வாகனங்களுக்கான பிரதேச முகாமையாளர் (சர்வதேச வியாபாரம்) ஆகியோர் இந்நிகழ்வில் சமுகமளித்திருந்தனர்.

DIMO நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும்ரூபவ் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே கருத்துத் தெரிவிக்கையில்,

“வெற்றியாளர்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் இந்த வாகனப் பேரணியில் ஏராளமானோர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொள்ள முன்வந்தமை எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. எரிபொருள் வினைதிறன் மிக்க கார்களை அறிமுகப்படுத்துவதன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த பெறுமதியை வழங்குவதில் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளதுடன் முழு குடும்பமும் தாராளமாக பயணிப்பதற்கு போதிய இட வசதியுடன் உயர்ந்த மட்டத்திலான எரிபொருள் வினைதிறனை Tata Nano தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது. DIMO இன் மிகச் சிறப்பான விற்பனைக்குப் பின்னரான சேவை மற்றும் நாடளாவியரீதியிலான எமது பிரசன்னம் ஆகியவை Tata வாடிக்கையாளர்களின் நலன்களை நாம் கவனிக்க இடமளித்துள்ளடன் இரத்மலானை மற்றும் கொழும்பு 14 ஆகிய இடங்களில் அமைந்தள்ள எமது இரு பிரத்தியேக பேணற் சேவை வசதிகளுடன் அவர்களுடைய வாகனங்களுக்கு 24 மணி நேரமும் எமது கவனிப்பை வழங்கி வருகின்றோம்.”

மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்ற வாகனப் பேரணி தொடர்பில் DIMO  நிறுவனத்தின் பணிப்பாளரான விஜித பண்டார கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கையில் உள்ள Tata வாகன உரிமையாளர்களிடமிருந்து இப்பேரணிக்கு கிடைக்கப்பெற்றுள்ள மிகவும் மகத்தான வரவேற்பையிட்டு நாம் மிகவும் பூரிப்படைந்துள்ளோம். நவீன தொழில்நுட்பம் மற்றும் தொழில்சார் தொழில்நுட்பவியலாளர்களுடன் Tata உரிமையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சேவையை வழங்கும் நாடளாவியரீதியிலான எமது பேணற்சேவை வசதிகளைக் கொண்ட வலையமைப்பானது Tata Nano கார்களுக்கு உயர் தரத்திலான பேணற்சேவையை வழங்குவதற்கு மூல காரணமாக உள்ளமையை கட்டாயமாக குறிப்பிட்டே ஆக வேண்டும். வாகன சாரதிகள் காண்பித்துள்ள அதிசிறந்த பெறுபேறுகள், Nano எந்த அளவிற்கு எரிபொருள் வினைதிறன் கொண்டது என்பதையும் எமக்கு நிருபித்துள்ளன.”

Tata Motors Limited நிறுவனத்தின் பயணிகள் கார்களுக்கான சர்வதேச வியாபார சந்தைப்படுத்தல் சேவைகளின் தலைமை அதிகாரியும் பிராந்திய தலைமை அதிகாரியுமான (தெற்காசியா) சுஜான் றோய் கூறுகையில்,

“இப்பேரணியில் பெரும் எண்ணிக்கையானோர் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொள்ள முன்வந்தமையானது இந்த கார் எந்த அளவிற்கு பிரபலமானது என்பதை காண்பிப்பதுடன் பயணித்த தூரம் மற்றும் அதற்காக உள்ளெடுத்த எரிபொருளின் அளவு தொடர்பான சிறப்பான பெறுபேறுகள் காரின் உயர் மட்டத்திலான எரிபொருள் வினைதிறனையும் நிரூபித்துள்ளன.

பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் வழங்கிவருகின்ற எமது உற்பத்திகளை மேம்படுத்தும் முயற்சிகளை Tata Motors நிறுவனம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.”

Tata Nano கார் இலங்கையில் 2011 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதுடன் நாட்டில் உச்ச எரிபொருள் வினைதிறன் கொண்ட கார்களுள் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது. மிகவும் கச்சிதமான அளவுடன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள GenX Nano ஆனது மிகவும் எடுப்பான Nano காராக காணப்படுகின்றது. மட்டற்ற வடிவமைப்பு வேலைப்பாடுகள் மற்றும் பல்வேறு வர்ணங்களில் GenX வடிவமைப்பு கிடைக்கப்பெறுகின்றது.

ePAS Electronic Power Assisted Steering, விரைவாக குளிரூட்டப்படுகின்ற குளிரூட்டி போன்ற சௌகரியங்களை GenX  கொண்டுள்ளதுடன், நவீன வடிவமைப்பு ஸ்திரத்தன்மை, விபத்தின் போது நொருங்கிப் போகாது பயணியைக் காக்கும் வசதி மற்றும் பயணிகளுக்கான சௌகரியம் அடங்கலான பாதுகாப்பு அம்சங்களையும் GenX கொண்டுள்ளது.

DIMO மற்றும் Tata Motor நிறுவனங்களுக்கிடையிலான பங்குடமை 55 வருடத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tata Bolt, Tata Zest, Tata Aria மற்றும் Tata Safari Storme பயணிகள் வாகனங்ளையும் DIMO இலங்கையில் விநியோகித்து வருகின்றது. மேலும் Tata GenX Nano தன்னியக்க (Automatic) வடிவம் மற்றும் Tata Tiago ஆகிய வாகனங்கள் எதிர்காலத்தில் இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. 

சிறு வர்த்தக தேவைகளுக்கான வாகனங்கள், தனி கெப் வாகனங்கள், இரட்டை கெப் வாகனங்கள், பேரூந்துகள் மற்றும் டிரக் வண்டிகள் அடங்கலாக பல்வேறு வகையான வர்த்தக தேவைகளுக்கான மற்றும் கடினமாக நிலப்பகுதிகளில் உபயோகிக்கப்படும் வாகனங்களையும் DIMO சந்தைப்படுத்தி வருகின்றது. 

இலங்கையில் கேந்திரரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் DIMO தனது வலையமைப்பினைக் கொண்டுள்ளதுடன் விசுவாசம் மிக்க DIMO வாடிக்கையாளர்களுக்கு விற்பனை பேணற் சேவை மற்றும் உதிரிப்பாகங்களுக்கான தேவைகளை அதன் மூலம் ஈடுசெய்து வருகின்றது. 

மேலும் 24 மணி நேர வீதி உதவு சேவையானது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்கள் எந்நேரமும் மன அமைதியுடன் வாகனங்களை செலுத்திச் செல்ல இடமளித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57