(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை கிரிக்கெட் அணியில் தற்போது விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் எவரும் ஊழல் மோசடி குற்றச்சாட்டில் ஈடுபட்டில்லை என சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) ஊழல் மோசடி தடுப்பு பிரிவு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட்  நிறுவனம் அறிக்கை வெளிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“கொவிட் 19 தொற்று பாதிப்பால் நிதி நெருக்கடிக்க முகங்கொடுத்துள்ள பாடசாலை கிரிக்கெட் பயிற்றுநர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு கடந்த 2 ஆம் திகதியன்று விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்றிருந்தது.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு எதிராக ஐ.சி.சி.யின் ஊழல் மோசடி தடுப்பு பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டிருந்தமை, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மூவரையே தவிர தற்போது விளையாடும் வீரர்கள் அல்ல என்பதை நாம் ஆழமாக நம்புகிறோம்” என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.