(எம்.மனோசித்ரா)

தவிர்க்க முடியாத காரணங்களினால் எதிர்வரும் சனிக்கிழமை (06.06.2020) நாடு முழுவதிலுமுள்ள தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்கள் சேவைகளுக்காக திறக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை விசேட அறிவித்தல் மூலம் தபால் மா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் தபால் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.