எனது அப்பா முழு உலகையும் மாற்றியுள்ளார் : புளொய்ட்டின்  6 வயது மகள் தெரிவிப்பு : மரணத்தை மகளுக்கு தெரிவிப்பதில் சங்கடப்பட்டேன் - புளொய்ட்டின் மனைவி

Published By: Priyatharshan

04 Jun, 2020 | 12:36 PM
image

எனது அப்பா முழு உலகையும் மாற்றியுள்ளார் என அமெரிக்காவில் பொலிஸாரால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட்டின் 6 வயது மகளான கியன்னா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு புளொய்ட்டின் மகளான கியன்னா தெரிவித்துள்ளதாக புளொய்ட்டின் நண்பரொருவர்  இன்ஸ்டகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜோர்ஜ் புளொய்ட்டின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று அவரது மனைவி மற்றும் 6 வயது மகள் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து நேற்றையதினம் ரொக்ஷி வொசிங்டனில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே ஜோர்ஜ் புளொய்ட்டின் மனைவியும் 6 வயது மகளும் தெரிவித்துள்ளனர்.

ஜோர்ஜ் புளொய்ட் நல்ல மனிதராக இருந்ததால் நான் அவருக்கு நீதி வேண்டும் எனக் கோருகிறேன். எவர் என்ன நினைத்தாலும் பிரச்சினையில்லை.

மேலும் ஜோர்ஜ் ஒரு நல்லவர், அவர் ஒரு நல்ல மனிதர் என்பதற்கு அவரது மகளே நல்ல சான்று "என்று அருகில் இருந்த ஜோர்ஜ் புளொய்ட்டின் மகளான கியானாவை சுட்டிக்காட்டி ஜோர்ஜின் மனைவி தெரிவித்தார்.

புளொய்ட் எப்போதும் மகளை கவனித்துக்கொள்வது தொடர்பாகவே பேசுவார்.  அவர் எப்போதும் மகள் கியானாவுக்கு ஆதரவாக இருந்தார்.

புளொய்ட் இறந்த சம்பவம் குறித்து அறிந்த போதும் மகள் கியானாவிடம் எவ்வாறு தெரிவிப்பது என்று எனக்கு சங்கடமாக இருந்தது.

ஆனால் கியானா தொலைக்காட்சியில் எனது அப்பாவின் பெயரை அனைவரும் உச்சரிக்கின்றனர். அப்பாவுக்கு என்ன நடந்தது என்று என்று அறிய விரும்பினாள்.

அதன்பின் நான் நான் அவளிடம் சொல்லக்கூடிய ஒரே விஷயம், அப்பாவால் மூச்சுவிட முடியவில்லை, என்று தெரிவித்தேன்.

எனது மகள் தனது வாழ்க்கை சாதனைகளை அடைந்துகொள்ள தனது தந்தையின் உதவியை இழப்பார் என்று கலங்கினார்.

இனி மகள் வளர்வதை புளொய்ட் பார்க்க மாட்டார். திருமண நாளின் போது தந்தை மகளின் கரம்பற்றிக்கொண்டு செல்ல மாட்டார்.

மகளுக்கு வாழ்ககையில் ஏதாவது பிரச்சினைகள் வரும்போது தந்தையின் உதவி தேவைப்படுவார். இனிமேல் அவளுக்கு தந்தையின் உதவி கிடைக்காது இவ்வாறு ஜோர்ஜ் புளொய்ட்டின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகரான மினேபொலிஸ் நகரில், கடந்த மே மாதம் 25 ஆம் திகதி அன்று நடந்த கைது செய்யும் முயற்சியின்போது, 46 வயதான ஜோர்ஜ் புளொய்ட் இறந்தார்.

இதேவேளை, பொலிஸாரின் பிடியில் இருக்கும்போது, பொலிஸாரின் கட்டுப்பட வைக்கும் முயற்சியால் ஜோர்ஜ் புளொய்ட் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததார் என அவரது மரணம் சட்ட ரீதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு காருக்கு அடியில் ஜோர்ஜ் புயொய்ட் கைவிலங்கிட்டு இருப்பது போன்றும், அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து பொலிஸார் ஒருவர் அழுத்துவது போன்றும் ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

இதனையடுத்து அமெரிக்காவின் பல நகரங்களிலும் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு 

அமெரிக்காவை பற்றி எரிய வைத்துள்ள ஜோர்ஜ் பிளாய்ட்டின் மரணம் - கொலையென உறுதி ; இதுவரை நடப்பதென்ன ?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52