யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தை உடைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் மனநலம் குன்றியவர் என்று  யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த நபர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அடைக்கல மாதா தேவாலயத்தின்  மூலையில் அமைக்கப்பட்டிருந்த குறித்த சொரூபம் மக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று முற்பகல் வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருக்கும் ஒருவரால் மாதா சிலையின் கண்ணாடிகள் மற்றும் கைப்பகுதி என்பன அடித்து உடைக்கப்பட்டது.

அந்த நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையைடுத்து தற்போது மாதாவின் சொரூபம் பாதுகாப்பு நலன் கருதி அடைக்கல மாதா ஆலயத்தின் உட்பகுதிக்குள் வைக்கப்பட்டுள்ளது.