மட்டக்களப்பு, பாசிக்குடா வீதி பேத்தாழையில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிசாா் தரிவித்தனா்.

பிறைந்துறைச்சேனை வாழைச்சேனையைச் சோ்ந்த 18 வயது இளைஞனே  இவ்வாறு உயிரிழந்துள்ளாா்.

குறித்த இளைஞன் வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து பாசிக்குடாவிற்கு மோட்டாா் சைக்கிளில் பயணயித்த போது  அவருக்கு முன்னால் பயணித்த சிறிய கென்ரா் ரக வாகனம் சடுதியாக வீதியை விட்டு மறு பக்கம் செல்ல முற்படுகையில் பின்னால் சென்றவா் தமது வேக கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளாா்.

இதனால் கென்ரா் வாகனத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. கல்குடா பொலிசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மெற்கொண்டதுடன்  சந்தேகத்தின் பேரில் கென்ரா் சாரதியை கைது செய்துள்ளனர். 

இதேவேளை சம்பவத்தில் இறந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிசாா் மேலும் தெரிவித்தனா்.