கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட வடமேல் மாகாணத்தில் “வனமி” இறால் செய்கை ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த மாகாணத்தில்  நவீன வசதிகளுடன் விஞ்ஞான பொறிமுறைகளை உள்ளடக்கிய வகையில் பொதுவான இறால் செய்கையை மேற்கொள்ளக் கூடிய இடங்களில் முன்னெடுத்தால் அதிக விளைச்சலை பெற்றுக்கொள்ளக்கூடிய ஏதுநிலை உள்ளதால் அதற்கான பொறிமுறைகளை உள்ளடக்கிய “வனமி” இரால் செய்கை திட்டத்தை முன்னெடுப்பதற்கான அனுமதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் கோரிக்கையாக சமர்ப்பித்திருந்தார்.

இந்நிலையில் இன்றையதினம் அமைச்சரவையில் “வனமி” இறால் செய்கையை ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.