(இரா.செல்வராஜா)

கொழும்பிலுள்ள ஹோட்டல்களை திறப்பதற்கு அனுமதி வழங்காவிட்டால் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடப்போவதாக ஹோட்டல் உரிமையாளர் சங்கம் எச்சரித்துள்ள நிலையில் சுகாதார அமைச்சு அனுமதியளிக்கும் பட்சத்தில் ஹோட்டல்களை திறப்பதற்கான அனுமதியை வழங்க தயார் என கொழும்பு மாநகர சபை பிரதம வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.கொழும்பு நகரம் உட்பட நாடளாவிய ரீதியில் சுமார் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன. கடந்த 2 மாதங்களுக்கு மேல் இவை மூடப்பட்டு இருப்பதால் ஹோட்டல் உரிமையாளர்கள் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றனர். 

இதுகுறித்து கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனியிடம் கேட்டபோது , விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க ஹோட்டல்களை திறப்பதற்கு சாதகமான சூழ்நிலை இருப்பதாக அறிவித்தால் , அவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.