தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளியாக மாறியது. இதற்கு நிசர்கா என பெயரிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர சூறாவளி மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இதன் காரணமாக மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

சூறாவளியானது மும்பையில் இருந்து தெற்கு தென்மேற்கு திசையில் 215 கிலோ மீட்டர் தொலைவிலும் குஜராத்தின் சூரத் நகரில் இருந்து 440 கிலோ மீட்டர் தெற்கு தென்மேற்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இந்தப் புயலானது வடகிழக்கு திசையில் 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

மேலும் நிசர்கா சூறாவளியானது வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு மகாராஷ்டிரா மற்றும் குஜராத் இடையே கரையை கடக்கும் எனவும் ஹரீஹரேஷ்வர் மற்றும் டாமன் இடையே அலிபாக் அருகே இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் போது 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Photo Credit: AFP