‘மெட்ராஸ்’,‘கபாலி’ பட புகழ் நடிகர் கலையரசன் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘டைட்டானிக்= காதலும் கவுந்து போகும்’ என்ற திரைப்படம் விரைவில் டிஜிற்றல் தளத்தில் வெளியாகவிருக்கிறது.

அறிமுக இயக்குனர் எம் ஜானகிராமன் இயக்கத்தில், ‘மெட்ராஸ்’.‘கபாலி ’பட புகழ் நடிகர் கலையரசன் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘டைட்டானிக் =காதலும் கவுந்து போகும்’.

இந்தப் படத்தில் கலையரசனுடன் நடிகைகள் ‘கயல்’ ஆனந்தி, ஆஷ்னா ஜாவேரி, வர்மா ராமசாமி, தேவதர்ஷினி, ஜாங்கிரி மதுமிதா, நடிகர்கள், காளி வெங்கட், சேத்தன், அர்ஜுனன், ராகுல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் சிவி குமார் தயாரித்திருக்கிறார்.

இயக்குநர் பாலாவின் உதவியாளரான இயக்குநர் ஜானகிராமன், ரொமான்டிக் ஜேனரில் உருவாக்கியிருக்கும் இந்த திரைப்படம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தயாராகி விட்டாலும் வெளியீட்டிற்காக காத்திருந்தது.

இந்நிலையில் ஜோதிகா நடிப்பில் வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ பட மாளிகைகளில் வெளியாகாமல் நேரடியாக டிஜிற்றல் தளத்தில் வெளியாகி, வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தப் படமும் விரைவில் நேரடியாக டிஜிற்றல் தளத்தில் வெளியாகவிருக்கிறது.

இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் சிவி குமார் தெரிவிக்கையில்,“ எங்களுடைய தயாரிப்பில் உருவான ‘மாயவன்’ என்ற தமிழ் திரைப்படம், ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு டிஜிற்றல் தளத்தில் வெளியானது.

அதனை இரண்டரை மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. அதனைத்தொடர்ந்து தற்போது‘ டைட்டானிக் =காதலும் கவுந்து போகும்’ என்ற படத்தை நேரடியாக டிஜிற்றலில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எப்போது வெளியாகும் என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.” என்றார்.