ரோஹிங்யா அகதிகளில் முதலாவது கொரோனா உயிரிழப்பு பதிவானது

Published By: Digital Desk 3

03 Jun, 2020 | 04:52 PM
image

பங்களாதேஷ் நாட்டில் ரோஹிங்யா அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

ரோஹிங்கியா அகதிகளில் முதலாவது கொரோனா வைரஸ் தாக்கத்தால் பதிவான இறப்பு இதுவாகும்.

71 வயதான குறித்த நபர், மே மாதம் 31 ஆம் திகதி அன்றுஅகதிகள் முகாமின் தனிமைப்படுத்தல் மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே உயிரிழந்துள்ளார்.

மியான்மரில் சிறுபான்மையினராக வாழ்ந்துவந்த ரோஹிங்யா இன முஸ்லிம்களின் சில குழுக்கள் உள்நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மியான்மார் இராணுவம் ஈடுபட்டது.

மியான்மாரில் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பமாகியது முதல் உயிருக்கு அஞ்சி சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான பங்களாதேஷில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். 

இவர்கள் அந்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மிகவும் மக்கள் தொகை அடர்த்தி நிறைந்த அப்பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது பங்களாதேஷில் உள்ள ரோஹிங்யா அகதிகள் முகாம்களில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்று கடந்த மாதம் மே 14 ஆம் திகதி  உறுதி செய்யப்பட்டது. 

இதுவரை குறைந்தது 29 ரோஹிங்கியா அகதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை 339 அகதிகளுக்கு கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரம், தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் சுமார் 15,000 அகதிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

பங்களாதேஷில் வைரஸ் பாதிப்புகள் தீவிரமாக அதிகரித்துள்ளன, நாடு முழுவதும் 60,000 க்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றுக்குள்ளாகி இருப்பதோடு, 700 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08