(எம்.எம்.சில்வெஸ்டர் )

கொவிட் 19 வைரஸ் சூழ்நிலையால் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள பாடசாலை மட்ட கிரிக்கெட் பயிற்றுநர்கள் 225 பேருக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நிதி உதவி அளிக்கப்பட்டது.

விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த நிதி உதவி வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, 132 பேருக்கு தலா ரூபா 20 ஆயிரம் ரூபாவுக்கான காசோலையை வழங்கினார்.

இதேவேளை, 24 பாடசாலைகளுக்கு ஆடுகளத்தை பராமரிப்பதற்கான ரோலர் இயந்திரங்களும் (TURF MACHINE ROLLERS), 16 பாடசாலைகளுக்கு மைதான புற்களை வெட்டுவதற்கான இயந்திரம் (LAWN MOWERS) மற்றும் கை உழவு இயந்திரம் (HAND TRACTORS ஆகியன வழங்கப்பட்டன.