இந்தியாவின் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஒரு கர்ப்பிணி யானை சமீபத்தில் பட்டாசுகளால் நிரப்பப்பட்ட அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு உயிரிழந்துள்ளது.

இது சில உள்ளூர் வாசிகளால் குறித்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்த விவரங்களை மலப்புரம் மாவட்ட வன அதிகாரி ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதையடுத்து இந்த சோக சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

சமூக ஊடகங்களில் வெளியான தகல்களின் படி ,

காட்டு யானை காட்டில் இருந்து வெளியே வந்து, அருகிலுள்ள கிராமத்தில் உணவு தேடிச் சென்றது. வீதிகளில் நடந்து செல்லும்போது, உள்ளூர்வாசிகள் யானைக்கு பட்டாசு நிறைந்த அன்னாசிப்பழத்தை வழங்கியுள்ளனர்.

இவ்வாறு உட்கொண்ட அன்னாசிப்பழம் , கர்ப்பிணி யானையின் வாயில் வெடித்தது, இதனால் அந்த கஜ யானை சோகமான முடிவை சந்தித்து. 

"யானை அனைவரையும் நம்பியது. யானை சாப்பிட்ட அன்னாசிப்பழம் வெடித்தபோது, யானை தன்னைப் பற்றி யோசிக்காது அதன் வயிற்றில் உள்ள குட்டியை பற்றி யோசித்து அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். என்று யானையின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபபட்ட குழுவில் அங்கம் வகித்த வன அதிகாரி மோகன் கிருஷ்ணன் மலையாளத்தில் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 

யானையின் வாயில் ஏற்பட்ட பட்டாசு வெடிப்பு அதனது நாக்கையும் வாயையும் மோசமாக காயப்படுத்தியுள்ளது.

யானையின் புகைப்படங்களையும் கிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார்.

யானையை மீட்க பல மணிநேர முயற்சிகளுக்குப் பிறகு, மே 27 மாலை 4 மணியளவில் யானை உயிரிழந்துள்ளது என்று வன அதிகாரி தெரிவித்தார். 

ஆர்.பி.