அதிரடித் தீர்ப்பு

Published By: Priyatharshan

03 Jun, 2020 | 12:40 PM
image

உயர் நீதிமன்றம் நேற்று வழங்கிய அதிரடித் தீர்ப்பு குறித்தே அனைத்து தரப்பினரது கவனமும் செறிந்துபோய் இருந்தது.

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மற்றும் பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஆகியவற்றை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு உட்படுத்துவதா ? இல்லையா ?என்பது தொடர்பிலேயே அந்தத் தீர்ப்பு அமைந்து இருந்தது.

இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதில்லை என உயர் நீதிமன்றம் நேற்று அதிரடியாக அறிவித்தது.

 உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகளை கொண்ட நீதியரசர்கள் பென்ஞ் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

இது தொடர்பில் 8 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதனை அடுத்து 10 நாட்களாக இது தொடர்பில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்களில் தேர்தல் ஆணைக்குழு அதன் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் ஜனாதிபதியின் செயலாளர் சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

குறித்த மனுதாரர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பாராளுமன்றத்தை கலைத்தமை தேர்தலுக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் சட்ட வலுவற்ற தாக்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அதேவேளை, பிரதிவாதிகள் சார்பில் இந்த மனுக்கள் நியாயமற்றவை என தெரிவித்து சகல மனுக்களையும் முற்றாக நிராகரிக்க வேண்டும்  எனக்கோரப்பட்டது.

இந்த நிலையிலேயே பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதியை  சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதில்லை என்ற அதிரடி அறிவிப்பை உயர்நீதிமன்றம் விடுத்தது.

இதேவேளை குறித்த வழக்கு நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் கூறப்படவில்லை எனவும், அதனை தொடர்ந்தே இது குறித்து ஏதேனும் கருத்து வெளியிட முடியும் என்றும் தெரிவித்துள்ள ஜனாதிபதி சட்டத்தரணி எம் .ஏ .சுமந்திரன் எவ்வாறெனினும் ஜனநாயகத்துக்கான போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில்  உயர்நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக இன்று பொதுத் தேர்தலுக்கான  திகதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் இன்று ஆணைக்குழுவில் நடைபெறும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடுத்த கட்டமாக தேர்தல்  திகதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் சூடுபிடிக்க போகின்றது. அரசியல்வாதிகள்கள் அதி வேகமாக மக்களைத் தேடத் தொடங்கி விடுவார்கள் . போகும் போக்கில் இதுவரை இருந்த கொரோனா அச்சமும் இல்லாமல் போய்விடும் என்று கூறுவதை விட வேறு எதைக் கூற முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54