வவுனியா கனகராயன்குளம் ஏ9 வீதியில் இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் மரணமடைந்துள்ளனர்.


குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில், மட்டக்களப்பில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறை நிமித்தம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு பிரிதொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.


இதன்போது இன்றுகாலை 5:30 மணியளவில் கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில், அரசடி வீதி நல்லூரை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஜெயமூர்த்தி திசிகாந்தன், பளை வீதி யாழை சேர்ந்த நிசான் ஜனுஸ்டன் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.குறித்த விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.