யாழ்ப்பாணம், இணுவில் – காரைக்கால் பகுதியில் இளைஞர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் இணுவிலை சேர்ந்த சற்குணம் பவிலன்(வயது 29) என்ற இளைஞன் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாகவே, குறித்த வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் இளைஞர் ஒருவர் தலையில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார் நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.