நாட்டில் இன்று செவ்வாய்கிழமை மாலை 9 மணி வரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 6 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இது வரையில் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1649 ஆக அதிகரித்துள்ளதோடு, 823 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

அத்தோடு தற்போது 814 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 84 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.