முன்னாள் அமைச்சர் சுஜீவ சேனசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச்செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாண சபை உறுப்பினராக அரசியலில் பிரவேசித்த சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

அதன் பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து அவர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.