லிந்துலையில் உள்ள சென்.கூம்ஸ் தோட்டமொன்றில் குளவிக்கொட்டுக்கு இலக்கான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

59 வயதுடைய 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

குளவிக் கொட்டுக்கு இலக்காகிய மேலும் 7 பேர் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆண்கள் இருவரும் பெண்கள் ஐவரும் அடங்குகின்றனர்.

இதேவேளை, கடந்த மாதமும் குளவிக் கொட்டுக்கு இலக்கான நான்கு பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.