இந்தாண்டு முதல் கிரகணமாக சந்திர கிரகணம் கடந்த ஜனவரி 10 ஆம் திகதி நள்ளிரவு தொடங்கி 11 ஆம் திகதி வரை நீடித்தது.

இந்நிலையில் தெளிவற்ற சந்திர கிரகணம் (penumbral lunar eclipses) ஜூன் 5 முதல் 6 வரை நள்ளிரவில் நடக்க உள்ளது. ஜூன் 21 ம் திகதி ஆண்டின் முதல் சூரிய கிரகணம் (Solar eclipse) நிகழ உள்ளது.

சந்திர கிரகணம் ஏற்படும் நேரம் :

ஜூன் 5 ஆம் திகதி, சந்திர கிரகணம் இரவு 11:15 மணிக்கு தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி 2:34 மணி வரை நீடித்து முடிகிறது. இந்த கிரகணத்திற்கு ஸ்ட்ராபெரி மூன் கிரகணம் (Strawberry Moon Eclipse) என்று அழைக்கப்படுகிறது.

பகுதி சந்திர கிரகணமாக நிகழ்வும் இந்த நிக்ழவின் போது 57% நிலவு மறைக்கப்படும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவிக்கின்றது.

இந்த கிரகணம் மொத்தமாக மூன்று மணி நேரமும் பதினெட்டு நிமிடங்கள் வரை நீடிக்கப் போகிறது.

எங்கெல்லாம் சந்திர கிரகணம் தெரியும்?

இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள், ஐரோப்பா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, பசுபிக் பிராந்தியம், தென் அமெரிக்காவின் தென் கிழக்கு பகுதிகள், அத்திலாந்திக், இந்திய பெருங்கடல், அந்தாட்டிக்கா ஆகிய இடங்களில் இந்த சந்திர கிரகணம் பார்க்க முடியும்.

இந்த சந்திர கிரகணம் மக்கள் கண்டு ரசிப்பது சற்று கடினம் தான். ஏனெனில் மங்கலான சந்திர கிரகணமாக இருக்கும் என்பதால் சரியாக தெரியாது.


(Source: timeanddate.com)

ஜூன் 21ல் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்

2020ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் 21ம் திகதி நடக்க உள்ளது. இந்த நிகழ்வு காலை 10.16 மணிக்கு தொடங்கி காலை 11.49க்கு உச்சமடைகிறது. பின்னர் மதியம் 1.30க்கு இந்த கிரகணம் விடுபடுகிறது. மொத்தம் 3 மணி நேரம் 14 நிமிடங்கள், 24 விநாடி வரை நீடிக்கிறது.

இந்த சூரிய கிரகணம் இலங்கை, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தெற்கு சீனா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எத்தியோப்பியா, கொங்கோ மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு ஆகிய நாடுகள், தென்கிழக்கு ஐரோப்பாவில் நாம் காண முடியும்.


(Source: timeanddate.com)

2020 வருடத்தில் வரும் கிரகணங்கள்

ஜூன் 5 அன்று  சந்திர கிரகணம்.

ஜூன் 21 அன்று  சூரிய கிரகணம்.

ஜூலை 5 அன்று  தினத்தில் சந்திர கிரகணம்.

நவம்பர் 30 அன்று ஒரு தெளிவற்ற சந்திர கிரகணம்

டிசம்பர் 14 அன்று சூரிய கிரகணம்.