கல்முனை ஆலயம் தொடர்பான வழக்கு தள்ளுபடி !

02 Jun, 2020 | 05:04 PM
image

கல்முனை வடக்கு உப  பிரதேச செயலத்தில் அமைக்கப்பட்டுள்ள  ஆலயம் தொடர்பாக  வழக்கினை  கல்முனை நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை  விஷேடமாக பொறுப்பளிக்கப்பட்ட நீதிபதி தர்மலிங்கம் கருணாகரன் வழக்கை விசாரித்து மனுவில் உள்ள குறைபாடு காரணமாக  இன்று செவ்வாய்க்கிழமை(2)  வழக்கை தள்ளுபடி செய்துள்ளார். 

இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலயம்  சார்பாக பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் மன்றில் ஆஜராகியிருந்ததுடன்  சட்டத்தரணிகளான ந.சிவரஞ்சித், மதிவதணன், ஆகியோர் ஆதரவாக  ஆஜராகியிருந்தனர்

கடந்த 2018ம் ஆண்டு  கல்முனை மாநகர சபை முதல்வர் சார்பில் கல்முனை வடக்கு உப  பிரதேச செயலகத்தில் நீண்டகாலமாக ஊழியர்களால் வழிபட்டு வந்த இவ்வாலயம் சட்ட ரீதியற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக   வழக்கு தாக்கல் செய்யப்பட்டு  கல்முனை நீதிவான்  நீதிமன்றத்தில்    வழக்கு நடைபெற்று வந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

அத்துடன் இவ்வாலய வழக்கில் நீண்டகாலமாக பல்வேறு வழக்கு தவணைகளில்  பிரதான சட்டத்தரணி நா. சிவரஞ்சித்துடன் சட்டத்தரணிகளான ஆர்த்திகா, மதிவதணன் ஆகியோர்  ஆஜராயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58