2011 இறுதிப் போட்டியில் இரு தடவைகள் ‘டொஸ்’ போட்டமைக்கான காரணத்தை விளக்கிய சங்கா

Published By: Digital Desk 4

02 Jun, 2020 | 04:56 PM
image

2011 இல் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் எதற்காக இரண்டு தடவைகள் நாணய சுழற்சி (டொஸ்) போடப்பட்டது என்ற குழப்பத்துக்கான காரணத்தை குமார் சங்கக்கார வெளியிட்டார்.

2011 இல் மும்பை வான்கடே  மைதானத்தில் நடைபெற்ற 10 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

இப்போட்டியில், இரண்டு தடவைகள் நாணயச் சுழற்சி போடப்பட்டமை  சர்ச்சையை கிளப்பியது.  இந்த குழப்பத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து அப்போது இலங்கை அணியின் தலைவராகவிருந்த குமார் சங்கக்கார விளக்கியுள்ளார்.

இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினுடனான ‘இன்ஸ்டாகிராம்’ உரையாடலில் சங்கக்கார தெரிவித்துள்ளதாவது,

“இறுதிப் போட்டி நடைபெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் திரண்டு இருந்தது. இவ்வளவு கூட்டத்தை எங்கள் நாட்டில் ஒரு போதும் பார்த்ததில்லை.

ஒரு முறை கொல்கத்தா ஈடன்கார்டனில் முதல் ஸ்லிப்பில் நின்ற வீரருடன் பேசுவது கூட கேட்க முடியாத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதே போல் தான் வான்கடேயிலும் காணப்பட்டது.

பூவா, தலையா? கேட்பதற்காக இந்திய அணித்தலைர் தோனி நாணயத்தை மேலே சுண்டி விட்டார். ஆனால் ரசிகர்களின் கரவொலியால் நான் என்ன கேட்டேன் என்பது தோனிக்கு சரியாக கேட்வில்லை. நான் ‘பூ’ என்று சொன்னதாக அவர் கூறினார். ஆனால் நான் ‘தலை’ தான் கேட்டதாக கூறினேன்.

போட்டி நடுவரும் நான் தான் ‘டொஸ்’ வென்றதாக கூறினார். ஆனால், தோனி அதை ஏற்கவில்லை. இதனால் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது. பிறகு இன்னொரு முறை ‘டொஸ்’ போடலாமே என்று தோனி  கேட்டுக்கொண்டார்.

இதனால் இரண்டாவது முறையாக ‘டொஸ்’ போடப்பட்டது. அதில் மறுபடியும் நான் கேட்டபடியே ‘தலை’ விழுந்தது. இது என் அதிஷ்டமா என்று தெரியவில்லை. நான் டாசில் நாணயச் சுழற்சியில் தோற்றிருந்தால் அநேகமாக இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்திருக்கும் என்று நினைக்கிறேன்.

எமது அணியில் சகலதுறை வீரரான எஞ்சலோ மெத்தியூஸ் அரை இறுதியின் போது காயமடைந்ததால் இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போனது. அது தான் எங்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. 

சரியான கலவையில் அணியை தெரிவு செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தியது. அவர் 100 சதவீதம் உடற்தகுதியுடன் இருந்திருந்தால் நாங்கள் முதலில் பந்து வீச்சைத் தான் தெரிவு செய்திருப்போம். என்றாலும், அது போட்டியின் முடிவை மாற்றியிருக்கும் என்று உறுதியாக கூறமாட்டேன். இருப்பினும் அணியின் கலவையில் சமநிலை ஏற்பட்டிருக்கும். அவர் 7 ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக செய்வது எங்களுக்கு மேலதிக பலமாகும்.

இந்த உலகக் கிண்ணப் போட்டியை திரும்பி பார்க்கும் போது நீங்கள் பிடியெடுப்புக்களை தவற விட்டமை குறித்து பேசுவீர்கள். அது விளையாட்டில் ஒரு அங்கம். 

ஆனால் என்னை பொறுத்தவரை மெத்தியூஸ் விலகலால் விளையாடும் பதினொருவரில் செய்யப்பட்ட மாற்றமே திருப்பு முனையாக அமைந்தது என்று கூறுவேன்” இவ்வாறு குமார் சங்கக்கார  கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20