மன்னார் மற்றும் முருங்கன் பகுதிகளில் இன்று (30) 8 மணிநேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படுமென நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதன்படி இன்று காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நீர் விநியோகம் தடை செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகளின் நிமித்தம்  நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.