இலங்கை கிரிக்கெட் வீரர் செஹான் மதுசங்கவின் விளக்கமறியல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் செஹான் ...

குளியாப்பிட்டி - பன்னலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கிரிக்கட் விளையாட்டு வீரரான ஷெஹான் மதுஷங்க கைது செய்யப்பட்டிருந்தார்.

பன்னல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பன்னல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்திருந்தார்.

கிரிக்கெட் விளையாட்டு வீரரான 25 வயதுடைய ஷெஹான் மதுஷங்க அவரது காரில் சென்றுகொண்டிருந்த போதே பொலிஸாரால் மறிக்கப்பட்டு சோதனை மேற்கொண்ட நிலையில் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்  இதன்போது அவரிடமிருந்து 2 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்னல பொலிஸார் முன்னெடுத்து வருந்தனர்.

இந்நிலையில் செஹான் மதுசங்கவை இன்றையதினம் குறியாப்பிட்டிய நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை அணியின் வீரர் செஹான் மதுசங்க, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.