அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் கைதியும் கர்ப்பிணியுமான பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார் என சுகாதார அதிகாரிகள் செய்தியாளர் கூட்டத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை குறித்த கர்ப்பிணி பெண் உட்பட 22 கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.

லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் இடம்பெற்ற முதலாவது கர்ப்பிணி மற்றும் கைதி இறப்பு இதுவாகும்.

உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு குறிப்பிடத்தக்க அடிப்படை சுகாதார நிலைமைகள் கீழ் இருந்துள்ளார் என லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி பொது சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தையும் உயிரிழந்துள்ளதாக  தெரிவித்துள்ளார்.

லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில்  228 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில், 79 வீதமானோர் அறிகுறிகளுடன் காணப்பட்டுள்ளனர்.

சிறையில் இருந்த குறித்த கர்ப்பிணி பெண் வைத்தியசாலையைில் சிகிச்சை பெறுவதற்கு முன் உயிரிழந்துள்ளார்.

சுமார் 10 மில்லியன் சனத்தொகையை கொண்ட லொஸ் ஏஞ்சல்ஸில் மொத்தம் 55,968 கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, 2,384 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.