பகமூண –தம்புள்ளை வீதியில், தமனயாய பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில், இராணுவ வீரர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

 மோட்டார் சைக்கிளொன்றும், தனியார் பஸ் வண்டியொன்றும் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானதாக, பொலிஸ்  ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 மோட்டார் சைக்கிளில் சென்ற இராணுவ வீரர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில்,   பகமூண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

லுணுகல மற்றும் கல்தொட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 28 வயதுடைய இராணுவ வீரர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் குறித்த பஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பகமூண பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.