உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63,62,145 பேராக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 3,77,152 ஆக உள்ளது.

உலகில் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. நாளுக்கு நாள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63,62,145 ஆக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 3,77,152 இலட்சமாக உள்ளது.

அது போல் இதுவரை உலகளவில் 29,00,146 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடதக்கது. 53,407 பேர் வைத்தியசாலைகளில் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். 

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,59,320 ஆக உள்ளது.

இங்கு பலியானோர் எண்ணிக்கை 1,06,925 ஆக உள்ளது. பிரேசிலில் 5.29 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலியானோர் எண்ணிக்கை 30,046 பேராக உள்ளது. 

ரஷ்யாவில் 4,14,878 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 4,855 ஆக உள்ளது. 

ஸ்பெயினில் 2,86,718 பேரும் பிரிட்டனில் 2,76,332 பேரும், இத்தாலியில் 2,33,197 பேரும் பிரான்ஸில் 1,89,220 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதோடு,  இந்தியாவில் 1,98,370 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு பலியானோர் எண்ணிக்கை 5,608 ஆக உள்ளது. உலகளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் 7ஆவது இடத்திற்கு வந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளமைகும் குறிப்பிடதக்கது.