3 நாட்களில் 21 ஆயிரம் கையெழுத்திட்டேன் - எதற்காக என விளக்குகிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

02 Jun, 2020 | 07:30 AM
image

மூன்று நாள்களின் பின்னர் எனது கை விரலில் பேனையின் தழும்பு பதியும் அளவுக்கு நான் 21 ஆயிரம் கையெழுத்துகளையிட நேரிட்டதென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவையில் நேற்றையதினம் (01.06.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை, சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு வரவழைப்பதற்காக, சட்ட மா அதிபரால் தயாரிக்கப்பட்ட ஆவணங்களில், அரசாங்கத்தின் தலைவன் என்ற ரீதியில், மூன்று நாள்களில் 21 ஆயிரம் கையெழுத்துகளையிட நேரிட்டது.

மஹேந்திரனை, மத்திய வங்கியின் ஆளுநராக நியமிப்பதற்குத் தான் எதிர்ப்பு தெரிவித்திருந்ததாகவும் அரசாங்கத்தை அமைத்து இரண்டு வாரங்களே ஆகியிருந்த நிலைமையில், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் விரிசலைக் கொண்டுவந்துவிடும் என்ற காரணத்தால், பிரதமரின் சிபாரிசுக்கு தலைசாய்த்தேன். இதில் எனது விருப்பு இன்றியே இந்நியமனம் வழங்கப்பட்டது.

2019இல், சிங்கப்பூரில் நடந்த மாநாடொன்றுக்குத் தான் சென்றிருந்த போது, அந்நாட்டுப் பிரதமரைத் தனிப்பட்ட ரீதியில் சந்தித்து, அர்ஜுன மஹேந்திரனை எம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right